கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

komandur-ilayavilli-achanகொமாண்டூர் இளையவில்லி  ஆச்சான், திருநாங்கூர் செம்பொன் கோயிலில்

திருநக்ஷத்ரம்: சித்திரை, ஆயில்யம்

அவதார ஸ்தலம்: கொமாண்டூர்

ஆசார்யன்: எம்பெருமானார்

பரமபதம் அடைந்த இடம்: திருப்பேரூர்

கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் எம்பெருமானாரின் தாய் வழி ஸஹோதரர். எம்பார் போலே. இளையவில்லி என்றால் லக்ஷ்மணன். லக்ஷ்மணன் ஸ்ரீ ராமனுக்குப் போல இவர் எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் செய்தார். பாலதன்வி குரு இவரே. எழுபத்து நான்கு ஸிம்ஹாஸனாதிபதிகளில் ஒருவர்,

இவரது தனியன், வாழித்திருநாமத்திலிருந்து இவர் பெரிய திருமலை நம்பியிடம் மிகவும் அணுக்கராயிருந்தார் என்றும் அவர்க்குக் கைங்கர்யங்கள் செய்தார் என்றும் அறிகிறோம்.

சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/p/charamopaya-nirnayam.html) நாயானாரச்சான் பிள்ளை இவரது பெருமையை விளக்கியுள்ளார்:

உடையவர் திருநாடு எழுந்தருளியபின் அடியார் பலரும் அத்துயரில் திருநாடேகினர். கணியனூர் சிறியாச்சான் சில நாள்கள் கணியூரில் இருக்க உடையவரிடம் விடைபெற்று வந்தவர், மீண்டும் உடையவரைக் காணும் ஆசையில் ஸ்ரீரங்கம் செல்லவும், வழியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவரைக் கண்டு “நம் ஆசார்யன் திருமேனி பாங்காய் உள்ளாரா?” என்று வினவ, அவர் உடையவர் திருநாடேகினார் என்னவும், “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்று சொல்லி, கணியனூர் சிறியாச்சான் திருநாடு புகுந்தார். கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் திருப்பேரூரில் வாழ்ந்து வந்தபோது ஒரு நாள் எம்பெருமானார் ஒரு திவ்ய ரதம் ஏறுவதும், அந்த ரதம் விண்ணில் ஏறவும் பல்லாயிரவர் நித்ய சூரிகள் திரளும் ஆழ்வார்கள் நாதமுனிகள் நித்ய சூரிகள் யாவரும் மங்கள வாத்யங்கள் வாசிக்க யாவரும் பின் தொடர ஸ்வாமி பரமபதம் புகுவதைக் கனவில் கண்டார். இக்கனவை அவர் அடுத்தகத்து வள்ளல் மணிவண்ணன் என்பவர்க்குச் சொல்லி, “எம்பெருமானார் பரமபதம் எய்தியதைக் கனவில் கண்டேன், இனி அடியேன் இரேன்” என்று கூறி “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்றவாறே தாமும் திருநாடு ஏகினார்.   இவ்வாறே எம்பெருமானார் பிரிவு தாளாது பலர் திரு நாடு ஏகினர். இன்னும் பலரும் அவ்வாறு ஏகாவண்ணம் எம்பெருமானார், “எம்பெருமான் கைங்கர்யம் தொடர்ந்து நடக்க வேணும், ஆகவே யாரும் உயிர் துறக்கலாகாது” என்று நியமித்ததால் ஸம்ப்ரதாய ஸம்ரக்ஷணர்த்தமாக ஆசார்யர்கள் பலர் தரித்திருந்தனர்.

கொமாண்டூர் இளையவில்லி ஆச்சானின் பிரபாவம் அளப்பரியது. பாகவத நிஷ்டையில் அவர்தாம் நிகர் அற்று இருந்தார். எம்பெருமானாரின் அன்புக்குப் பாத்திரமாகவும் இருந்தார். நாமும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையை அவரின் திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான் தனியன்:

ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம்
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்:  http://guruparamparai.koyil.org/2013/04/03/koil-komandur-ilayavilli-achan/

வலைத்தளம் – https://guruparamparai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thought on “கோயில் கொமாண்டூர் இளையவில்லி ஆச்சான்”

  1. அடியோங்கள் கோமாண்டூர் இளையவல்லி வம்சத்தில் வந்தவர்கள் ஆனால் வடகலை அஹோபிலமடம்பக்கத்தில் மடத்தின்சிஷ்யர்கள்.காஸ்யப கோத்ரம்

Leave a Comment